Thursday, February 22, 2007

300. உயிர் வாழ உதவி வேண்டி - 3

அன்பான நண்பர்களே,
சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

சமீபத்தில் பதிவர் பொன்ஸ் (பூர்ணா) மருத்துவ உதவி கேட்டு வந்த ஒரு மின் மடலை எனக்கனுப்பி, குழந்தை லோகபிரியாவின் மருத்துவ உதவிக்கு (குழந்தை தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்று, நலம் பெற்று வருகிறாள்) வழங்கியது போக, மீதியுள்ள தொகையை (கிட்டத்தட்ட 22000) பிரியதர்ஷினி என்ற 3 வயதுக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு வழங்கலாமே என்று ஆலோசனை தந்திருந்தார்.

நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நேற்று அவரும், பதிவர் பாலபாரதியும் Dr. செரியன் ஹார்ட் ·பவுண்டேஷனில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பிரியதர்ஷினியின் பெற்றோரையும் சந்தித்து, விவரங்கள் கேட்டறிந்தனர். அவர்களுக்கு நன்றி. Disha Foundation என்ற தொண்டு நிறுவனம் உதவி செய்வதாக வாக்கு கொடுத்திருந்த போதிலும், சற்று அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில், குழந்தையின் தந்தை திரு.மூர்த்தி, மிகவும் அலைந்து, பலரிடம் கடனுதவி பெற்று (வீட்டையும் அடமானம் வைத்து) மருத்துவமனை முன் பணமாகக் கேட்ட 2 லட்சத்தை, 3 நாட்களுக்கு முன் கட்டி விட்டார்.

இன்று நான் மருத்துவமனைக்குச் சென்று, திரு.மூர்த்தியிடம் பேசினேன். அவர்கள் கோயமுத்தூர்காரர்கள். இந்த complicated சர்ஜரி செய்ய, அங்குள்ள (KG Hospital உள்ளிட்ட) பெரிய மருத்துவமனைகளும் இசையாததால், இவ்வளவு பணம் செலவழித்து, சென்னையில் (Dr.செரியன் போன்ற அனுபவம் வாய்ந்த நிபுணரிடம்) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். திரு.மூர்த்தி ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாக பணி புரிகிறார். சற்று சிரமமான குடும்பச் சூழல் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மனிதர் (கோயமுத்தூருக்கே உரித்தான) நல்ல குணத்துடன் இருக்கிறார். ரூ 200000 புரட்ட தான் பட்ட சிரமங்களைக் கூட அவ்வளவாக பெரிதுபடுத்தவில்லை ! சென்னையில் தெரிந்தவர் / உறவினர் யாரும் இல்லாததால், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வேண்டிய நிலைமை.

குழந்தைக்கு இதயத்தில் ஒரு செயற்கை வால்வ் பொருத்த வேண்டியுள்ளது. அது தவிர, இதயத்தில் ஒரு ஓட்டையை அடைக்க வேண்டியுள்ளது. 5 மருத்துவர்கள் பங்கு கொள்ளும் அறுவை சிகிச்சை முடிய 8 மணி நேரம் ஆகும் என்று கேட்டறிந்தேன். இதயத்தில் கெட்ட இரத்தமும் நல்ல இரத்தமும் கலந்து விடுவதால், பிரியதர்ஷினியின் முகம் மற்றும் கைகள் சற்று நீலம் பாரித்திருந்தது. இம்மாதிரி பிரச்சினையால் பீடிக்கப்பட்ட குழந்தையை Blue Baby என்று கூறுவார்கள்.

இன்னும் ஒரு 55000-60000 தேவைப்படும் என்று கேள்விப்பட்டேன். லோகபிரியாவுக்காக நண்பர்கள் அனுப்பிய உதவித் தொகையில் ரூ.22000 கைவசம் உள்ளது. சென்ற உதவி முயற்சிகளில் பங்கு பெற விரும்பி இயலாத நண்பர்கள், இக்குழந்தையின் மருத்துவச் செலவுக்கு தங்களால் இயன்றதை தந்து உதவுமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

உதவி செய்ய விரும்பும் நண்பர்கள், மடல் வழி தொடர்பு கொள்ளவும்.
poorna.rajaraman@gmail.com
balaji_ammu@yahoo.com
உதவுவதற்கான விவரங்களுக்கு, மேற்கூறிய இரண்டு முகவரிகளுக்கும் மடல் அனுப்பவும்.

Pons' posting: நீலக் குழந்தை..

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 300 ***

13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

சேதுக்கரசி said...

எனக்கும் இதுபற்றிய மடல் வந்திருந்தது, அதன் authenticity தெரியாததால் ஒன்றும் செய்யவில்லை. உங்கள் பதிவுக்கு நன்றி. என்னாலான உதவியைச் செய்ய, பொன்ஸைத் தொடர்பு கொள்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

சேதுக்கரசி,

நன்றி.

சேதுக்கரசி said...

300வது பதிவா இது? இப்ப தான் கவனிச்சேன்.. வாழ்த்து + பிக :-)

thiru said...

நல்ல விசயத்துக்கு பின்னூட்ட கயமை... பாராட்டுக்கள் பாலா!

தருமி said...

தொடரட்டும் ...

நன்றி
வாழ்த்துக்கள்

பொன்ஸ்~~Poorna said...

பாலா,
முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. :)

உங்கள் பதிவுக்கு லிங்க் கொடுத்து நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன், இது பற்றி.

enRenRum-anbudan.BALA said...

திரு, தருமி, பொன்ஸ், சேதுக்கரசி,

வாழ்த்துக்களுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.

எ.அ.பாலா

லக்கிலுக் said...

பின்னூட்ட கயமை

thiru said...

நல்ல விசயத்துக்கு பின்னூட்ட கயமை

enRenRum-anbudan.BALA said...

லக்கிலுக்,திரு,
நன்றி.

enRenRum-anbudan.BALA said...

Test !

சேதுக்கரசி said...

4 வயது சந்தோஷ் உயிர் வாழ உதவி தேவைப்படுகிறது:

http://iyandra-alavu-udhavalaamae.blogspot.com/2007/04/help-4-yr-old-boy-santhosh.html

நண்பர் இராகவன் என்ற சரவணன் அனுப்பிய கோரிக்கை.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails